தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் காமெடியனாக, நகைச்சுவை ஜாம்பவானாக விளங்கும் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தனது திரைப்பயணத்தில் சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார். அந்த வகையில் நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகும் கலகலப்பான காமெடி எண்டர்டெயினர் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கிறார் வடிவேலு.

முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வைகைப்புயல் வடிவேலு இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர்கள் ரெட்டின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், RJ விக்னேஷ் காந்த் ஆகியோருடன் விஜய் டிவி சிவாங்கி மற்றும் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது மைசூரில் நடைபெற்றுவந்த 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் 3-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மைசூர் அரண்மனையில் நடைபெற்றுவந்த படப்பிடிப்பை நிறைவு செய்து வைகைப்புயல் வடிவேலு, ஷிவானி மற்றும் இயக்குனர் சுராஜ் உட்பட படக்குழுவினர் அனைவரும் இருக்கும் புகைப்படத்தை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படம் இதோ…