கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிவித்து உள்ளார்.

“தமிமிழும், தமிழர்களுகம் எப்போதுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள்” என்ற சொல்லாடல், பொதுவாக ஒன்று உண்டு.

அந்த வகையில் தான், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள், தமிழுக்கு சேவை ஆற்றிச் சென்ற தன்னலமற்ற மாபெரும் தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் பல்வேறு விருதுகளை வழங்கி, சிறந்த ஆளுமைகளை அடையாளப்படுத்துவதோடு அவர்களை கவுரவித்தும் வருகிறது. 

அப்படிதான், கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் மற்றும் விருதாளர்களின் பட்டியலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது அறிவித்து உள்ளார்.

அதன் படி,

பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்

மகாகவி பாரதியார் விருது  - பாரதி கிருஷ்ணகுமார்

பாவேந்தர் பாரதிதாசன் விருது -  புலவர் செந்தலை கவுதமன்

சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்

சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்

தமிழ்த்தாய் விருது -  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது -  இரா. சஞ்சீவிராயர்

சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழ்

ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல்,

தேவ நேயப்பாவாணர் விருது - கு.அரசேந்திரன்

உமறுப்புலவர் விருது - நா.மம்மது

கி.ஆ.பெ. விருது - ம.இராசேந்திரன்

கம்பர் விருது - பாரதி பாஸ்கர்

ஜி.யு.போப் விருது - ஏ.எஸ்.பன்னீர்செல்வம்

மறைமலையடிகள் விருது - சுகி.சிவம்

இளங்கோவடிகள் விருது - நெல்லைக் கண்ணன்

அயோத்திதாசப் பண்டிதர் விருது -  ஞான. அலாய்சியஸ் 

ஆகியோருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படும்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

குறிப்பாக, “இந்த ஆண்டு முதல் விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் விருதுத் தொகையான 1,00,000 ரூபாய்லிருந்து 2,00,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுவதுடன், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை ஆகியவையும் வழங்கி, பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படுவார்கள்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.