தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் 2021 பொங்கலுக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

இதனை அடுத்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.இந்த படத்தினை தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி இயக்குகிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்ற தகவலும் பரவலாக பரவி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது.

இந்த படத்தினை 2022 தீவாளி அல்லது 2023 பொங்கலுக்கு கொரோனவை பொறுத்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.தற்போது சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த படம் ஒரு பக்காவான குடும்ப கதை , பூவே உனக்காக,துள்ளாத மனமும் துள்ளும் படங்களை போல விஜய்க்கு அனைத்து அம்சங்களும் அமைந்த ஒரு படமாக இது இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.