தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.இவர் நடிப்பில் கடைசியாக மாநாடு படம் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து பத்துதல,வெந்து தணிந்தது காடு,கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

பத்து தல படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.கன்னடாவில் சூப்பர்ஹிட் அடித்த Mufti படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது.ஓபுலி N கிருஷ்ணா இந்த படத்தினை இயக்கி வருகிறார்.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசைமைத்து வருகிறார்.இந்த படத்தில் மற்றுமொரு நாயகனாக கெளதம் கார்த்திக் நடித்து வருகிறார்.

ப்ரியா பவானி ஷங்கர்,கலையரசன்,டீஜே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சிம்பு இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சிம்பு இந்த படத்தின் ஷூட்டிங்கில் மார்ச் மாதம் இணைவார் என தெரிகிறது.இந்த படத்தின் படத்தொகுப்பாளராக மாநாடு உள்ளிட்ட பல வெற்றி படங்களின் எடிட்டர் பிரவீன் கே எல் இணைந்துள்ளார்.

தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிடுவது குறித்து படக்குழுவினர் ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளனர்.பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் வருவதை குறிக்கும் வகையில் ஒரு டீவீட்டை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பதிவிட்டுள்ளனர்.இதன்மூலம் படத்தின் ஒரு அப்டேட் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது அது ஃபர்ஸ்ட்லுக்கா அல்லது கிளிம்ப்ஸ் வீடியோவா என்பதை நாம் பொறுத்திருந்து தான பார்க்கவேண்டும்.