முதல் மனைவியின் 4 வது மகள், 2 வது மனைவியின் மகனுடன் முறையற்ற வகையில் காதல் கொண்டிருந்த சம்வத்தால், அவர் தற்போது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி அருகே தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

இதில், முதல் மனைவிக்கு மொத்தமாக 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். ஆனால், 2 வது மனைவிக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே உள்ளார்.

அதன்படி, முதல் மனைவியின் 4 வது மகள் 16 வயதான சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். 

இந்த சூழலில் தான், முதல் மனைவியின் 4 வது மகள் 16 வயதான சிறுமி, 2 வது மனைவியின் மகனான 16 வயது சிறுவனுடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவரும் அண்ணன் - தங்கை உறவு முறை வருவதால், இதனை அறியாமல் அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இப்படியாக, முறையற்ற இவர்களது காதல் விசயம், இவர்களது பெற்றோருக்குத் தெரிந்த நிலையில், அவர்களது உறவினர்களுக்கும் தெரிந்து உள்ளது. 

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அனைவரும், இந்த முறை தவறிய காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

அத்துடன், அந்த 16 வயது சிறுமியையும், அந்த 16 வயது சிறுவனையும் அழைத்து இரு தரப்பினரும் கடுமையாக கண்டித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்று பலரும் அறிவுரை கூறியதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த 16 வயது சிறுமி, நேற்று முன் தினம் மாலை தனது வீட்டில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால், பதறித் துடித்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது தொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசாக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், சிறுமியின் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணையில் தான், முறை தவறிய காதலால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.