“கொரோனா 3 வது அலையால், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அனுமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இனி அதிகரிக்கும்” உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் எச்சரித்து உள்ளார். 

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது தற்போது 4.83 லட்சத்தை தாண்டி இன்னும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதே போல், இந்தியாவில் தற்போது 3 வது அலை கொரோனா தொற்று பரவிக்கொண்டு உள்ளதால், அதன் பாதிப்பு இன்று காலையுடன் 3.53 கோடியை தாண்டி பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் தான், “கொரோனா வைரஸ் கடைசி வரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்” என்று, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டமானது இன்றைய தினம் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பொது மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்” என்று, வலியுறுத்தினார். 

அத்துடன், “கொரோனா வைரஸ் கடைசி வரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்” என்று கூறி, அவர் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

மேலும், “கொரோனா 3 வது அலையை கடக்க இந்த 3 C யை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், நெருங்கிய தொடர்பு,  காற்றோட்டம் இல்லாத இடம், கூட்டம் கூடுவது என, இந்த 3 யும் நாம் அனைவரும் நினைவில் கொண்டு, இனி நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும், அப்படி செயல்பட்டால் நிச்சயம் கொரோனா 3 வது அலையை நாம் கடந்து விடலாம்” என்றும், நம்பிக்கைத் தெரிவித்தார்.

குறிப்பாக, “சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அனுமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இனி அதிகரிக்கக்கூடும்” என்றும், தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் எச்சரித்தார்.

“ஆனால், இந்த இடைப்பட்ட வேளையில் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், கண்டிப்பாக மரணத்தை  தவிர்க்கலாம்” என்றும், அவர் தெரிவித்தார்.

“முதலில் கொரோனா வைரஸை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், அவற்றை தடுப்பதாக நினைத்து பல நாடுகள் ஊரடங்குகளை அறிவித்து உள்ளன என்றும், தற்போது நமக்கு அவற்றை பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது” என்றும், குறிப்பிட்ட தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், “இதன் காரணமாக, நாமக்கு முழு நேர ஊரடங்கு போட வேண்டிய அவசியமில்லை” என்றும், அவர் தெரிவித்தார்.

முக்கியமாக, “தமிழ்நாட்டில் ஒமைக்ரான் 4 மடங்கு வேகமாக பரவுகிறது என்றும், ஒமைக்ரான் பாதிப்பு குறைவாக தெரிந்தாலும், கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது என்றும், இதனால் நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும், தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் பேசி உள்ளார்.