இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,41,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது.

corono treatmentஇந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 90 ஆயிரத்து 928 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 ஆக பதிவாகினது. இது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் 28.8 சதவீதம் அதிகம்.

இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 1,41,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 21 சதவீதம் அதிகமாகும் இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 40,925 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,53,68,312 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் அதேபோல் தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 285 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,83,463 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 40,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,44,12,740 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 4,72,169  பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,50,61,92,903 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 90,59,360 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,29,948 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 68,84,70,959 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.