இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்துள்ள RRR திரைப்படம் வருகிற 2022 ஜனவரி 7 ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக  சென்னையில் RRR படத்திற்கான Pre ரிலீஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் உட்பட தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

குழந்தைகளின் நடனத்தை ரசித்த இயக்குனர் S.S.ராஜமௌலி மேடை ஏறி வந்து குழந்தைகள் அனைவரையும் வெகுவாக பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மிர்ச்சி விஜய் குழந்தைகளையும் மற்ற கலைஞர்களையும் பாராட்டினார் ஆனால் ரம்ஸ் வாசித்த ட்ரம்மர் வெற்றியை குறிப்பிட தவறிவிட்டார்.

இதனை கவனித்த நடிகர் சிவகார்த்திகேயன் மேடையின் கீழ் இருந்தே கைகளால் சைகை செய்து விஜய்யிடம் ட்ரம்மரை குறிப்பிடும்படி சொல்ல அதனை புரிந்து கொண்ட மிர்ச்சி விஜய்யும் ட்ரம்மரை குறிப்பிட்டு பாராட்டினார்.இந்நிகழ்வு கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வந்தது. 

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்குட்ரம்மர் வெற்றி அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த நிகழ்வின் காரணமாக "சிவா அண்ணாவால் எனக்கு ஒரு புது வழி கிடைத்துள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் குறித்து பல நெகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துள்ளார். இசைக்கலைஞர் ட்ரம்ஸ் வெற்றியின் அந்த வீடியோ பதிவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.