தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் தயாliப்பில் 3-வது படைப்பாக வெளியானது ரைட்டர் திரைப்படம்.

இயக்குனர் ஃபிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ள ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனி உடன் இணைந்து திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சிவா, மகேஸ்வரி, லிஸ்ஸி ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்.பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான ரைட்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதனையடுத்து ரைட்டர் பட இயக்குனர் ஃபிராங்கிளின் ஜேக்கப் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது.

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும் கோப்ரா, மகான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களின் தயாரிப்பாளருமான S.S.லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புதிய திரைப்படத்தை இயக்குனர் ஃபிராங்கிளின் ஜேக்கப் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து  இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.