தென்னிந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் களி தெலுங்கில் ஃபிடா தமிழில் மாரி 2 NGK இந்த பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். சமீபத்தில் சாய்பல்லவி சாய்பல்லவி வெளிவந்த திரைப்படம் ஷ்யாம் சிங்கா ராய். 

இயக்குனர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில், தெலுங்கில் தயாராகி பல மொழிகளில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஷியாம் சிங்கா ராய் படத்தில் நடிகர் நானி கதாநாயகனாக நடிக்க, சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிஹாரிகா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், உருவாகியிருக்கும் ஷியாம் சிங்கா ராய் படத்திற்கு சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில், நவீன் நூலின் படத்தொகுப்பு செய்துள்ளார் மிக்கி.ஜே.மேயர் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள  ஷியாம் சிங்கா ராய் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடைபோடுகிறது.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராமுலு திரையரங்கில் ரசிகர்களுடன் மாறு வேஷத்தில் ஷியாம் சிங்கா ராய் படத்தை கண்டு ரசித்துள்ளார். யாரும் அடையாளம் காணமுடியாதபடி புர்கா அணிந்து மாறுவேஷத்தில் சாய் பல்லவி திரையரங்கில் படம் பார்த்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…