தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் நந்தாமுரி பாலகிருஷ்ணா தொடர்ந்து பல அதிரடி மாஸ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக பாலகிருஷ்ணா நடித்த ரூலர் திரைப்படம் மெகா ஹிட்டானது.

இதனையடுத்து இந்த ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அகண்டா. கடந்த டிசம்பர் 2-ம் தேதி ரிலீசான அகண்டா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள அகண்டா திரைப்படத்தை த்வாரகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

ராம் பிரசாத் ஒளிப்பதிவில் தமன்.S இசையமைத்துள்ள அகண்டா படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து பிரக்யா ஜெய்ஸ்வால் கதாநாயகியாக நடிக்க ஜெகபதி பாபு மற்றும் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.தமன்.S இசையில் அகண்டா படத்தில் இடம்பெற்ற ஜெய் பாலைய்யா பாடல் பாலகிருஷ்ணாவின் ஸ்டைலான நடனத்தால் அனைவரையும் கவர்ந்தது. 

இந்நிலையில் பிரபல நடிகை நிவேதா தாமஸ் ஜெய் பாலைய்யா பாடலில் பாலகிருஷ்ணா நடனமாடிய அதே நடன அசைவுகளை நடனமாடும் புதிய இன்ஸ்டாகிராம் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிவேதா தாமஸின் அந்த இன்ஸடா ரீல்ஸ் வீடியோ இதோ…