கடந்த 2020ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசான ஆன்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை படத்தில் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா, ராஜீவ்மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் என 5 இயக்குனர்களின் 5 வித்தியாசமான கதைகள் இணைந்து வெளிவந்து ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது 2022ஆம் ஆண்டு மீண்டும் அமேசான் பிரைம் வீடியோவில் புதிய ஆன்தாலஜி திரைப்படமாக ரிலீசாகிறது புத்தம் புது காலை விடியாதா. இத்திரைப்படத்திலும் 5 வித்தியாசமான கதை களங்களை கொண்ட 5 எபிசோடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர்கள் ரிச்சார்ட் ஆன்டனி, பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா பாலசுந்தரம் மற்றும் சூரிய கிருஷ்ணா ஆகியோர் இயக்கத்தில் 5 வெவ்வேறு கதை களங்களில், நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், அர்ஜுன் தாஸ், நதியா, லிஜோமொள் ஜோஸ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கௌரி கிஷன், மணிகண்டன், விஜி சந்திரசேகரன், டிஜே அருணாச்சலம், முன்னணி ஸ்டன்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன், சனந்த், அன்பு தாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வருகிற 2022ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ம்தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீஸாகும் புத்தம் புது காலை ஆன்தாலஜி படத்தின் அசத்தலான டீசர் தற்போது வெளியானது. அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள புத்தம் புது காலை விடியாதா டீசரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.