அரசியலில் ரஜினி வருகைக்காக முப்பது ஆண்டுகளுக்கு மேல் வாக்களிக்காமல் காத்திருந்து இன்று உள்ளாட்சி தேர்தலில் முதல் முறை வாக்களித்த ரசிகர்.

rajinikanth

தமிழகத்திலுள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 1369 மாநகராட்சி, 3824 நக ராட்சி மற்றும் 7409 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 12,602 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.போட்டியின்றி தேர்வானவர்கள், மரணமடைந்தவர்களை  தவிர்த்து மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில் திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினிகாந்த் கடந்த  30 ஆண்டுகளுக்கு மேலாக சூசகமாக சொல்லி வந்ததை நம்பி வந்த வந்தனர் அவரது ரசிகர்கள்.  இதனால் என்றைக்கு ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரோ அன்றைக்குத்தான் அவரது கட்சிக்குத் தான் தனது முதல் வாக்கை செலுத்த வேண்டும் என்று காத்திருந்து.. காத்திருந்து ஏமாந்து போன ரசிகர் ஒருவர் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது முதல் வாக்கை பதிவு  செய்திருக்கிறார்.

ரஜினி ரசிகர் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபால புரத்தைச் சேர்ந்த மகேந்திரன். இவர் ரஜினியின் தீவிர ரசிகரான இவர் என்றைக்கு ரஜினி அரசியலுக்கு வருகிறாரோ அன்றைக்குத் தான் தன்னுடைய முதல் வாக்கை செலுத்துவேன் என்று 30 ஆண்டுகளாக வாக்களிக்காமல் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் தனது மனைவி தேர்தலில் போட்டியிட்டபோது கூட மகேந்திரன் வாக்கு செலுத்தவில்லையாம்.   அந்த அளவுக்கு தீவிரமான ரஜினி ரசிகர் மகேந்திரன், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக அறிவித்ததால் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்.   

மேலும் இதையடுத்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக வாக்கு செலுத்தாமல் இருந்த மகேந்திரன் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை 22-வது வார்டு ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அமைந்திருக்கும் வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று தனது முதல் வாக்கை பதிவு செய்திருக்கிறார்.