தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உயர்ந்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.அதிக ரசிகர்களை கொண்டுள்ள சில தமிழ் நடிகர்களில் ஒருவராக தளபதி விஜய் இருக்கிறார்.இவரது படங்கள் ரிலீஸ் ஆனாலே திரையரங்குகள் திருவிழா கோலம் கொண்டு இருக்கும்.இவரது மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது

அடுத்ததாக இவர் நடித்துள்ள பீஸ்ட் படம் விரைவில் வெளியாகவுள்ளது,இதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.திரைப்படங்களை தாண்டி பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை தளபதி விஜய் அவ்வப்போது செய்து வருவார்.அவரைப்போலவே இவரது ரசிகர்களும் தங்கள் விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர்.

கொரோனா நிவாரணம்,வெள்ள நிவாரணம் என அனைத்திலும் தங்கள் பங்கினை ஆற்ற விஜய் மக்கள் இயக்கம் தவறியதில்லை.சமீபத்தில் முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுகின்றனர்.

இன்று இந்த தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தளபதி விஜய் நீலாங்கரையில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை வாக்குப்பதிவு தொடங்கியவுடனே தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.அவர் ஓட்டுப்போடும் நேரத்தில் அவரை சுற்றி கேமெராக்கள் இருந்ததால் சில நிமிடங்கள் ஓட்டு செலுத்துவது தாமதமானது.ஓட்டுப்பதிவு செய்யவந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.