தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதி முன்னதாக பல சுயாதீன பாடல்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இதனையடுத்து ஆம்பள படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி தொடர்ந்து இசையமைத்த இன்று நேற்று நாளை மற்றும் தனி ஒருவன் ஆகிய திரைப்படங்கள் பின்னணி இசைக்காகவும் பாடல்களுக்காகவும் கவனிக்கப்பட்டன.

தொடர்ந்தது இசையமைப்பாளராக அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி மீசையமுறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கினார். அடுத்தடுத்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம் மற்றும் அன்பறிவு என வரிசையாக ஹிப்ஹாப் தமிழா நடித்த திரைப்படங்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே சுயாதீன இசை ஆல்பங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் கடைசியாக வெளிவந்த நான் ஒரு ஏலியன் ஆல்பம் பலராலும் ரசிக்கப்பட்டது. அந்த வரிசையில் நான் ஒரு ஏலியன் ஆல்பத்தின் அடுத்த பாடலாக போகட்டும் போகட்டும் போ எனும் பாடல் அடுத்து வெளிவர தயாராகி உள்ளது.

திங்க் மியூசிக் தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து பாடி நடித்துள்ள இந்த போகட்டும் போகட்டும் போ பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள போகட்டும் போகட்டும் போ பாடலின் ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.