இந்திய சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாகவும் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

முன்னதாக நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக தயாராகியுள்ள மஹா, சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ், த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் மை நேம் இஸ் ஸ்ருதி மற்றும் நடிகர் ஆதியுடன் இணைந்து நடித்துள்ள பார்ட்னர் உள்ளிட்ட திரைப்படங்கள் ஹன்சிகாவின் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக தயாராகி வருகின்றன.

இதனிடையே இயக்குனர் J.M.ராஜ சரவணன் இயக்கத்தில் உருவாகும் ரவுடிபேபி படத்தில் நடித்து வரும் ஹன்சிகா அடுத்ததாக வாலு, ஸ்கெட்ச் & சங்கத்தமிழன் ஆகிய படங்களின் இயக்குனர் விஜய் சந்தர் தயாரிப்பாளராக தனது ஃபிலிம் வொர்கஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் படமாக  உருவாகும் புதிய திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இயக்குனர்கள் சபரி கிரீசன் மற்றும் குரு சரவணன் இணைந்து இயக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய இந்த புதிய திரைப்படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் CS இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.