பூஜையுடன் தொடங்கிய தமன்னாவின் புதிய படம்!
By Anand S | Galatta | February 18, 2022 19:55 PM IST

இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட முன்னணி மொழி திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்தும், டான்ஸராக சில படங்களின் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.
முன்னதாக நடிகை தமன்னா தெலுங்கில் விரைவில் வெளிவரவுள்ள குருதுண்டா சீதாக்களம் மற்றும் F3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்திலும் கதாநாயகியாக நடித்து வரும் தமன்னா நடிப்பில் பாலிவுட்டில் போலே சுடியான் மற்றும் பிளான் ஏ பிளான் பி ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.
இந்த வரிசையில் அடுத்ததாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் தமன்னா நடிப்பில் தயாராகிறது பப்ளி பவுன்சர் திரைப்படம். பல தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்கார் இயக்கத்தில் உருவாகும் பப்ளி பவுன்சர் திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஹிந்தி ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்கிளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
தமன்னாவுடன் இணைந்து சௌரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹல் வைத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பவுன்சர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகும் எமோஷனல் நகைச்சுவைத் திரைப்படமான பப்ளி பவுன்சர் திரைப்படத்திற்கு ஹிம்மான் தமிஜா ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுவரை உலகம் பார்த்திராத, கேட்டிராத பெண் பவுன்சர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 18) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
My 15th film. One more unique story to be told. Welcome to the unseen world of Bouncers. A funny, heartfelt, hilarious tale. Meet @tamannaahspeaks in a never seen before avatar as #BabliBouncer. 😀🙌#FoxStarStudios @foxstarhindi @JungleePicture pic.twitter.com/Q8XgjrMGHl
— Madhur Bhandarkar (@imbhandarkar) February 18, 2022
Tamannah to join Bahubali 2 sets!
31/05/2016 10:46 PM
Tamannah-Prabhu Deva's next is 'Kaantha'
31/03/2016 06:12 PM
Prabhu Deva and Tamannah under AL Vijay direction
01/02/2016 06:22 PM