தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் H.வினோத் சதுரங்கவேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து அஜீத் குமாருடன் முதல்முறை இணைந்த வினோத் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பின்க் படத்தின் தமிழ் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி முன்னணி இயக்குனர் ஆனார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் அஜீத் குமாருடன் இயக்குனர் H.வினோத் இணைந்த திரைப்படம் வலிமை. நீரவ்ஷா ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

பிரபல் தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் வலிமை திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து ஹுமா குரேஷி, சுமித்ரா, யோகிபாபு, செல்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மிரட்டலான வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா நடித்துள்ளார்.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடவிருக்கும் வலிமை திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடலின் புதிய எமோஷனல் ப்ரோமோ வீடியோ வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ...