தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தனது கடின உழைப்பால் முன்னேறி தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடித்த மாஸ்டர் படம் கடைசியாக வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து விஜய் நடித்துள்ள Beast படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தயாராகவுள்ள தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள விஜய் குறித்து ஒரு சிறிய புகைப்படம்,வீடியோ என எது வந்தாலும் வைரலாகி விடும்.கடந்த வருடமும் இவரது சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் Favourite ஆக இருந்தன.

தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக தளபதி விஜய் ஒரு குழந்தையை கையில் வைத்திருப்பது போல ஒரு செம கியூட்டான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்