தமிழகத்தில் தளர்வுகள் ஏதுமின்றி மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள்? எதற்கெல்லாம் தளர்வுகள்? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, “தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி முதல் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை” முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன் படி, எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது? எதற்கெல்லாம் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது உள்ளிட்ட விவரங்களையும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதன் படி,

- மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- பால் விநியோகம், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- பொது மக்கள் நலன் கருதி, இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

- நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, நாளை ஒரு நாள் மட்டும் எப்போதும் போல் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி, இன்றும் - நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- காய்கறிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே வந்து விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- உரிய மருத்துவ காரணங்கள், இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவுடன் அனுமதி வழங்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- உணவகங்கள் காலை 6-10, மதியம் 12-3, மாலை 6-9 மணி வரை மட்டுமே பார்சலுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- ஒரு வாரம் காலத்திற்கு மளிகை, காய்கறி கடைகள் செயல்படாது என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

- பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செல்படும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது. 

- மின்னணு சேவை நிறுவனங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

- வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. 

- டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.