தமிழில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பின்னர் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் ஒரு நாயகன் என்றால் அது நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். பில்லா, ரங்கா, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை, படிக்காதவன், ராஜாதி ராஜா, தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி என  படம் மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்பாபு அல்லுறி சீதாராம ராஜு  திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமான மோகன்பாபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். தமிழில் வெளியான அன்னை ஓர் ஆலயம், தாய் மீது ஆணை போன்ற திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர் சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப்போற்று துணை படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடித்திருந்தார். 

இந்நிலையில் நடிகர் மோகன் பாபுவும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்து எடுத்த ஒரு போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில்  வைரலாகி இருக்கிறது. சமீபத்தில் மோகன்பாபுவின் வீட்டிற்கு ரஜினிகாந்த்  சென்றபோது எடுக்கப்பட்ட அந்த  தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.