ஜோக்கர் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ரம்யா பாண்டியன்.இந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினார்.அடுத்ததாக சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்தில் ஹீரோயினாக நடித்தார் ரம்யா பாண்டியன்.

இவரது சேலை போட்டோஷூட் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.இந்த போட்டோஷூட்டிங் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார் ரம்யா பாண்டியன்.அடுத்ததாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் ரம்யா பாண்டியன்.

இந்த நிகழ்ச்சியின் பைனல் வரை சென்ற ரம்யா பாண்டியன் மூன்றாவது இடம் பிடித்தார்.இதனை தொடர்ந்து ஜீ5-ல் வெளியான முகிலன் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.அடுத்ததாக பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் முக்கிய போட்டியாளராக பங்கேற்று அசத்தினார் ரம்யா பாண்டியன்.

அடுத்ததாக சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இவருடன் இணைந்து வாணி போஜன் இந்த படத்தில் நடிக்கிறார்.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

கொரோனா தொற்றின் தாக்கம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பலரும் கொரோனா தடுப்பூசிகளை எடுத்து வருகின்றனர்,அந்த வரிசையில் தற்போது ரம்யா பாண்டியனும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார்.இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்.