இந்தியாவிலேயே அதிக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகம் முழுக்க தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் மக்களின் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் ஆங்காங்கே மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முக கவசம் அணியாமலும் செல்வதை நாம் பார்க்க முடிகிறது. 

தடுப்பு ஊசி மீதான பயமும் குழப்பமும் இன்னும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. தினமும் பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி தமிழக அரசின் விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் விதமாக பிரச்சாரம் செய்துள்ளார். 

அந்த வீடியோவில்,எல்லாரும் கண்டிப்பாக முக கவசம் போட்டுக்கோங்க, இது நம்மளையும் பாதுகாக்கிறது  கொரோனா தொற்றில் இருந்து மற்றவர்களையும் பாதுகாக்கிறது. முகக் கவசம் உயிர்க்கவசம். அதே மாதிரி சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் கைகளை நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கிருமி நாசினியை பயன்படுத்துங்கள். 

கொரோனாவை நாம் அனைவரும் சேர்ந்து தோற்கடிப்போம். கொரோனாவை வெல்வோம் மக்களை காப்போம். கொரோனா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம். நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என விழிப்புணர்வோடு பேசியுள்ளார்.  ஜெயம் ரவியின் இந்த விழிப்புணர்வு வீடியோ மக்கள் மத்தியில்  பாராட்டப்பட்டு வருகிறது.