அமேசான் பிரைம் OTT  தளத்தில் ஒளிபரப்பப்படும் பிரபலமான வெப்சீரிஸ் தி  பேமிலி மேன்.இயக்குனர்கள் ராஜ் மற்றும் D.K வின்  இயக்கத்தில் நடிகர் மனோஜ் பஜ்பை நடிகைகள் ப்ரியாமணி சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள இந்த வெப் சிரிஸின் முதல் சீசன் கடந்த 2019 ஆண்டு  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.  அடுத்ததாக இதன் இரண்டாம் பாகம் வருகிற ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த வெப் சீரிஸ்க்கு தடை விதிக்க கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக தி பேமிலி மேன் 2 இரண்டு வெப்சீரிஸ்-ன் ட்ரைலர் மற்றும் டீசரை பார்த்த  சீமான், 

“ஹிந்தியில் வெளியாகும் தி பேமிலி மேன் 2 தொடரின் கதை களத்தை சென்னைக்கு மாற்றி அதில் ஒரு ஈழப் பெண்ணை போராளியாக சித்தரித்து அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்க செய்திருப்பதும் அந்தப் போராளிகளுக்கும் பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கும் சம்பந்தம் இருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல ஈழத்தில் இரண்டு லட்சம் தமிழர்களை சிங்களப்பேரினவாதத்தின் கொடூரங்களுக்கு பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும் மிகப்பெரும் ஜனநாயக வாதிகளாக நின்று அறப்போராட்டம் வாயிலாகவும் சட்டப் போராட்டம் வாயிலாகவும் உலக அரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களை திரைப்பட தொடரின் வாயிலாக தீவிரவாதிகள் என காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.” 

“ஏற்கனவே மிகத் தவறாக எடுக்கப்பட்ட எண்ணம் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்பட அது அவை ரத்து செய்யப்பட்டது போல ஃபேமிலி மேன் 2 எனும் இணைய தொடரின் ஒளிபரப்பை ரத்து செய்ய வேண்டும் அதனை செய்ய மறுத்து தே ஃபேமிலி மன் 2 இணைய தொடரை நாடெங்கும் ஒளிபரப்பை தமிழர்கள் குறித்து தவறான கருத்துருவாக்கத்தை செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.” 

என ஆவேசமாக தெரிவித்துள்ளார். மிகுந்த சர்ச்சையை கிளப்பி உள்ள ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் வருகிற ஜூன் 4-ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெப்சீரிஸ் வெளியாகுமா ஆகாதா என்ற குழப்பம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.