அரியலூர்  பணியின் போது காவல் உதவி ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் காவல் நிலையத்தில் காவல்  உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லெட்சுமி ப்ரியா. நேற்று மாலை செந்துறை ரவுண்டானா அருகில் பணியில் இருந்த லெட்சுமிபிரியா மயங்கி விழுந்தார். இந்நிலையில் விசாரணையின் போது செடி கருகி போகச் செய்யும் பூச்சி மருந்தை குடித்ததாக கூறிய லெட்சுமி ப்ரியா சுயநினைவை இழந்த நிலையில் அரியலூரில் உள்ள தனியார்‌ மருத்துவமணையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதையடுத்து உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அவர் உடல்நிலை அபாய நிலையில் உள்ளதால் தொடர்ந்து தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உதவி ஆய்வாளர் லெட்சுமி பிரியா திருச்சியில் உள்ள ஐஜி அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார்.

மேலும் பணியின் தொடர்பாக ஏதாவது பிரச்சனை இருந்துள்ளதா இல்லை உயர் அதிகாரிகள் கொடுத்த தொல்லையினால் தற்கொலைக்கு முயன்றாரா என்ற பல்வேறு கோணத்தில்  போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பெண் காவல் உதவி ஆய்வாளர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெண் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.