விவசாயத்தை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியமும்  தேவையும் உள்ளது என செயற்குழு பொறுப்பேற்கும் நிகழ்வு விழாவில்  அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் தெரிவித்தார். 

kathiresan

அண்மையில் நடந்த மதிப்பீட்டாளர் அமைப்பின் அதாவது  Institution of Valuers என்கிற சென்னை கிளையின் புதிய செயற்குழு பொறுப்பேற்கும் நிகழ்வு  நடைபெற்றது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், மதிப்பீட்டாளர் அமைப்பின் நிர்வாகிகள் வினய் கோயல், பி.வி.ரமணா, முத்துசெல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நிகழ்வில் பேசிய அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் கூறியதாவது: இந்தியா போன்ற மிகப்பெரும் நிலப்பரப்பும், மனித வளமும் உடைய நாட்டில், விவசாயத்தை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், விவசாயத்தின் மதிப்பை உயர்த்துவதன் அவசியம் பற்றியும் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் உரையாற்றினார். 

மேலும் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும், அமெரிக்கா போன்ற சிறிய நிலப்பரப்பை உடைய நாடால் விவசாயத்தில் பெருமளவு சாதிக்க முடியுமென்றால், ஏன் இந்தியா போன்ற பெரிய நிலப்பரப்பும், ஆற்றல்மிக்க மனிதவளமும் உடைய நாடால் சாதிக்க முடியாது? என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் விவசாயத்துக்கு தரப்படும் முக்கியத்துவம், விளைபொருளுக்கு தரும் மதிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதன் தேவை பற்றியும் கதிரேசன் உரையாற்றினார்.