தமிழ் திரை உலகில் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இசையில் அடுத்தடுத்து தனுஷின் வாத்தி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல், இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம், கார்த்தியின் சர்தார், அருண்விஜயின் யானை, விஷாலின் மார்க் அண்டனி மற்றும் லாரன்ஸின் ருத்ரன் ஆகிய திரைப்படங்கள் தயாராகின்றன.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கிவரும் ஜீவி பிரகாஷ் குமார், முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த இடிமுழக்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகும் ரெபல் படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள செல்ஃபி திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் ஈட்டி படத்தின் இயக்குனர் ரவி ராசு இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்துள்ள திரைப்படம் ஐயங்கரன்.

ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் பெறடி, அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஐங்கரன் படத்தை காமன் மேன் நிறுவனம் சார்பில் B.கணேஷ் தயாரிக்க லிப்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள ஐங்கரன் படத்தின் புதிய ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆனது. அந்த ட்ரைலர் இதோ…