தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஒவ்வொரு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் அடுத்த வசூல் சாதனை படைக்க பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் எழுதி இயக்கியுள்ளார். தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க,  செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், சதீஷ் கிருஷ்ணன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், அனிருத் இசை அமைத்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் பீஸ்ட் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. முன்னதாக பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதி வெளிவந்த அரபிக் குத்து பாடல்  வேற லெவல் ஹிட் அடித்துள்ளது.

தளபதி விஜய்யின் செம ஸ்டைலான நடனத்தில் வெளிவந்த அரபிக் குத்து பாடல் YouTube-ல் இதுவரை 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அரபிக் குத்து பாடலுக்கு முன்னணி திரை நட்சத்திரங்கள் பலரும் நடனமாடி தங்களது வீடியோக்களை சோசியல் மீடியாவில்
 பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக சமந்தா, அனிருத், பூஜா ஹெக்டே, ஜொனிதா காந்தி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோக்கள் வைரலாகின. 

இந்நிலையில் தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VarunDhawan (@varundvn)