அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை பொருத்திக் கொண்ட நபர் சிகிச்சை முடிந்த 2 மாதங்களுக்கு பிறகு திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்டில் வசித்து வந்த 57 வயதான டேவிட் பென்னட், இதய நோயாளியாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

அப்போது, இந்த நோயாளியின் உயிரை காப்பாற்ற வேண்டுமானால், “மாற்று இதயம் பொருத்த வேண்டியது அவசியமாக இருப்பதாக” இருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். 

ஆனாலும், “பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகளால் மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவராக பென்னட் இருந்தார்” என்றும், மருத்துவர்கள் கூறினார்கள். 

இதனையடுத்து, “டேவிட் பென்னட்டின் உயிரை காப்பாற்ற, பன்றியின் இதயத்தை பொருத்த” அந்நாட்டில் உள்ள மேரிலாண்ட் மருத்துவ பல்கலைக்கழக டாக்டர்கள் முடிவு செய்தனர். 

அதன் படி, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அனுமதியும் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று, 57 வயதான டேவிட் பென்னட்க்கு, ன்றியின் இதயத்தை பொருத்தி இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த செய்தி, உலகம் முழுவதும் பெரும் வைரலானது.

அதன் படி, “பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயத்தை, அமெரிக்க டாக்டர்கள் வெற்றிகரமாக” பொருத்தினார்கள். 

அதுவும், “பன்றியின் இதயம் மனித உடலில் செயல்படும் வகையில் அதில் சில மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டன என்றும், பன்றி இதயத்தின் உயிரணுக்களில் உள்ள சர்க்கரையை அகற்றினர்” என்றும், செய்திகள் வெளியானது. 

அத்துடன், “மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம் பொருத்தப்பட்டதைத் தொடர்ந்து, 57 வயதான பென்னட் உடல் நலத்துடன் இருப்பதாக” டாக்டர்கள் கூறி வந்தனர்.

அத்துடன், “57 வயதான டேவிட் பென்னட்க்கு, இதய நுரையீரல் இயந்திரம் பொருத்தப்பட்ட போதிலும், பென்னட் புதிய இதயத்தின் மூலமாக சுயமாக சுவாசித்துக் கொண்டிருப்பதாகவும்” டாக்டர்கள் தெரிவிதது வந்தனர்.

இவற்றுடன், 57 வயதான டேவிட் பென்னட் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் முழுமையாக இருந்து வந்தார். 

இந்த நிலையில் தான்,  பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நோயாளி, 2 மாதங்கள் கடந்த நிலையில், அவரது உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவற்றுடன், அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன. எனினும், சிகிச்சை பலன் இன்றி முன்னதாக மருத்துவமனையில் டேவிட் பென்னட் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மேரிலாண்ட் மருத்து மையம் தகவல் கூறி உள்ளது.