இந்திய திரையுலகின் முன்னணி  இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் S.S.ராஜமௌலி. பாகுபலி 1&2 திரைப்படங்களின் இமாலய வெற்றியை தொடர்ந்து இதுவரை இல்லாத பெரும் பொருட்செலவில் இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் RRR.

இந்திய சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசாக இருக்கும் RRR படத்தில் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிதுதுள்ளார் மேலும் அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரிக்கும் RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. RRR படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் KK.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் M.M.கீரவாணி இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த RRR திரைப்படத்தின் RRR-GLIMPSE வீடியோ,ட்ரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வருகிற மார்ச் 25-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் மலேசியாவில் படத்தை தமிழ் , தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடும் ரிலீஸ் உரிமத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.