செல்போனில் ஆபாச படம் பார்த்தவரின் செல்போனுக்கு நிர்வாணப்படம் அனுப்பி பணம் பறித்த பொறியாளர் உள்ளிட்ட 2 பேர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கரூர் வங்கி ஒன்றில்  உதவி மேலாளராக பெண் அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். அவரது கணவர் சமீபத்தில் தனது செல்போனில் ஆபாசப் படம் ஒன்றை பதிவறிக்கம் செய்து பார்த்து உள்ளார்.

அப்போது, அவரது செல்போனுக்கு ஒரு ஆபாச மெசேஜ் வந்து உள்ளது. அதில், அடையாளம் தெரியாத பெண்ணின் ஆபாச படம் வந்து உள்ளது. இதைப் பார்த்த அவர், யார் மெசேஜ் அனுப்பியது என்றுத் தெரியாமல் குழம்பிப் போய் உள்ளார்.

அடுத்த சிறிது நேரத்தில், அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்து உள்ளது. அதில், எதிர் முனையில் பேசிய மர்ம நபர், “செல்போனில் உனக்கு அனுப்பிய படம் எப்படி இருக்கு? உனக்கு அனுப்பிய படத்தைப் போல உனது மனைவியின் ஆபாச படத்தையும் வலைதளத்தில் அனுப்புவேன்” என்று கூறி மிரட்டி இருக்கிறார்.

“உனது மனைவியின் ஆபாசப் படத்தை மார்ப்பிங் செய்து அனுப்பவா?” என்றும், அவர் மிரட்டியிருக்கிறார்.

இதனால், பயந்துபோன அவர் “நீ யார்? எனக்கு ஏன் போன் செய்கிறாய்?” என்று கேட்டு உள்ளார். அதற்கு பதில் பேசிய அந்த நபர், “ஆன்லைனில் ஆபாசப்படம் பார்த்தாயே மறந்துப்போச்சா? அடுத்த வீட்டுப்பெண்கள் என்றால் இனிக்குதா? நீ பார்த்த ஆபாச வலைதளம் ஃபிஷிங் வலைதளம், அது உன் டேட்டா, உன் வீட்டில் உள்ளவர்கள் அனைத்து புகைப்படங்கள் அனைத்தையும் எங்களுக்கு தந்துவிட்டது” என்று பதில் அளித்திருக்கிறார்.

“இப்ப பார்த்த ஆபாசப் படம் போல் உன் மனைவியின் படத்தை மற்றவர்களுக்கு அனுப்பினால் வங்கி அதிகாரியான உன் மனைவியின் மானம் போய்விடும் அதன் பிறகு நீ குடும்பத்தோட தற்கொலை செய்துகொள்ள வேண்டியது தான்” என்றும், அவர் மிரட்டி பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்.

இதனால், இன்னும் பயந்துப்போன வங்கி அதிகாரியின் கணவர், கூகுள் பே மூலம் போனில் மிரட்டிய மர்ம ஆசாமியின் கணக்குக்கு 49 ஆயிரம் ரூபாய் முதலில் அனுப்பி உள்ளார். பின்னர், மீண்டும் போன் செய்து அவர்கள் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

அப்போது, கணவன் ஏதோ மன உளைச்சலில் இருப்பதை கண்டுபிடித்த பெண் வங்கி அதிகாரி, கணவனிடம் விசாரித்து உள்ளார். அப்போது, சபலப்பட்டு இணையத்தில் ஆபாசப் படம் பார்த்ததையும், அதைத் தொடர்ந்து வந்த மிரட்டல் மற்றும் பணம் அனுப்பியதையும் கூறியிருக்கிறார்.

இதனைக்கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதிகாரி, உடனடியாக இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார். தனியார் வங்கி உதவி மேலாளரின் கணவர் லோகாண்டா என்ற இணைய தளத்தில் ஆபாச விளம்பரம் பார்த்து உள்ளார். 

அதில், அவர்கள் கேட்ட விவரங்களை பதிவு செய்து உள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவருடைய செல்போன் எண்ணை வைத்தும், அதன் தகவல்களை திரட்டி, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை சேகரித்து உள்ளனர்.

இது குறித்து அந்த கும்பல் வழக்கம் போல் போன் செய்து மிரட்டி உள்ளனர். அப்போது, அந்த செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது, அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள், வங்கி கணக்கு ஆகியவை பொள்ளாச்சியை சார்ந்த 2 சிவில் இன்ஜினியராக பணியாற்றும் பிரசாந்த் என்ற 27 வயது இளைஞரையும், அவருக்கு உதவியாக இருந்த 49 வயதான அஜீத் குமார் என்கின்ற கொத்தனாரம் தான் இதை எல்லாம் செய்வது என்று கண்டுப்பிடித்து, அவர்களை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். 

மேலும், அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் பணம், இரு சக்கர வாகனம், பாஸ்போர்ட், 4 செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.