6 சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாசப் படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகியை போலீசார் அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர், பாஜகவில் தெற்கு ஒன்றியச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இவர் தான், சிறுமிகளுக்கு 6 சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அதாவது, மயிலாடுதுறை அடுத்து உள்ள குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான மகாலிங்கம், அந்த பகுதியில் பாஜக நிர்வாகியாக அதிகம் அறியப்பட்ட முகமாக வலம் வந்துகொண்டிருந்தார். 

60 வயதான பாஜக நிர்வாகி மகாலிங்கம், தனது கிராமத்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது, 7 வயது சிறுமிகள் உள்பட மொத்தம் 6 சிறுமிகளிடம் தனது செல்போனில் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து, அந்த ஆபாசப் படங்களை அந்த 6 சிறுமிகளிடமும் அவர் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இப்படியாக, “செல்போனில் காட்டிய ஆபாசப் படங்களைப் போன்று, நீங்களும் என்னிடம் நடந்து கொள்ள வேண்டும்” என்றும், அவர் சிறுமிகளை வற்புறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், “இது தப்பாக இருப்பதாக உணர்ந்த அந்த சிறுமிகள், இதற்கு மறுப்புத் தெரிவிக்கவே, அந்த சிறுமிகளை அவர் மிக கடுமையாக மிரட்டியதாகவும்” கூறப்படுகிறது.

இதனால், இன்னும் பயந்து போன அந்த சிறுமிகள் அழத் தொடங்கி உள்ளனர். ஆனாலும், அந்த நபர் சிறுமிகளை மிரட்டுவதிலேயே குறியாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், சிறுமி அழுதுகொண்டே இருந்ததால், சிறுமியின் பெற்றோர் “என்ன நடந்தது?” என்று விசாரித்து உள்ளனர்.

இதில், பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி மட்டும் தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி, அழுது உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தினர். பின்னர், பாஜக பிரமுகர் மகாலிங்கத்தை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அவர் சிறுமிகளிடம் ஆபாசப் படம் காட்டி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, பாஜகவில் தெற்கு ஒன்றியச் செயலாளராகப் பதவி வகித்து வரும் 60 வயதான மகாலிங்கம் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் இச்சையை தூண்டுதல், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல சட்டப் பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், “இது போன்று வேறு சிறுமிகளிடமும் அவர் இது போன்று பாலியல் அத்து மீறிலில் ஈடுபட்டாரா?” என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.