கோவை  பழங்குடியின மாணவி நீட் தேர்வில் வென்று சாதனை 

அடிப்படை வசதிகள் இல்லாத பழங்குடி கிராமத்தில் இருத்து படித்து நீட் தேர்வில் மாணவி வெற்றி பெற்று இருப்பது கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நஞ்சப்பனூர் பழங்குடி கிராமத்தில் மலசர் பழங்குடி வகுப்பை சேர்ந்த மாணவி சங்கவி நீட் தேர்வில் 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த பழங்குடியினர் கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மலசர் பழங்குடியினருக்கு, சுற்றுவட்டார விவசாய தோட்டங்களில் உள்ள கூலி வேலை வாழ்வாதாரமாக இருந்து வருகிறது பாதியில் நிற்கும் பசுமை வீடுகள், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட வசதியின்மை அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் குடிசை வீட்டில் இருந்து படித்து முதன்முதலாக மருத்துவகல்லூரி செல்கின்றார் மாணவி சங்கவி

sangavi

உயர் படிப்பிற்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வந்தது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளால் கவனம் பெற்றார் மாணவி சங்கவி. இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளால் அரசின் பார்வை இந்த மாணவி மீது பட்டது மாணவி சங்கவிக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது  2018 ம் ஆண்டு 12 ம் வகுப்பை முடித்த அவர் மருத்துவராக வேண்டும் லட்சியத்தில் நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வெளியான தேர்வு முடிவுகளில் பழங்குடி மாணவி சங்கவி தேர்ச்சி பெற்றுள்ளார். நஞ்சப்பனூர் பழங்குடி கிராமத்தில் மருத்துவகல்லூரிக்கு செல்லும் முதல் மலசர் பழங்குடி மாணவி சங்கவி. இடையில் மாணவியின் தந்தை உயிரிழந்து விட்ட நிலை மற்றும் அம்மாவிற்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல். அவரை கூட இருந்து பார்க்க வேண்டிய நிலையில் படித்தேன். கையில் இருக்கும் புத்தகங்களை வைத்து நீட் தேர்விற்கு படித்தேன் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாணவி சங்கவி படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

டாக்டராக வேண்டும் என்பது தனது கனவு எனவும்  202 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்ததது மகிழ்ச்சியாக  இருப்பதாகவும் பழங்குடி மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே தனது கனவு எனவும் தெரிவித்தார். நீட் தேர்வை பார்த்து பயப்பட கூடாது எனவும், நம்மால் முடிந்த வரை முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்