தமிழ் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தை காண ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். 

படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற மாமனிதன் படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து அவரே இசை அமைத்துள்ளார். 

மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் படம் வெளியாகததால் மிகுந்த கவலையில் இருந்தனர் விஜய் சேதுபதி ரசிகர்கள். இந்நிலையில் படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநராக கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான லாபம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய இப்படப்பிடிப்பு கடந்த மாதம் நடந்து முடிந்தது. லாபம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளனர் ரசிகர்கள். 

இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.