அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் மீதியுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஏழு வித்தியாசமான தோற்றங்களில் சியான் விக்ரம் உள்ள போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது. முதல் பாடலான தும்பி துள்ளல் பாடல் வெளியாகி பிலே லிஸ்ட்டை ரூல் செய்து வருகிறது. ஷ்ரேயா கோஷல் மற்றும் நகுல் அப்யங்கர் பாடியுள்ள இந்த பாடல் வரிகளை விவேக் மற்றும் ஜிதின் ராஜ் இணைந்து எழுதியுள்ளனர். 

இப்படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்தனர். பொதுவாகவே உச்ச நட்சத்திரங்களின் திரைப்படம் திரையரங்கில் வெளியானால் தான் திருவிழாவாக மாறும். இதை உறுதி செய்யும் வகையில் சியான் விக்ரம் ரசிகர்கள் கோப்ரா படத்தின் தியேட்டர் செலிபிரேஷன் போன்று எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்திருந்தார் இயக்குனர். 

கோப்ரா படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கோப்ரா படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. குறிப்பாக மழையில் சியான் நனைந்த படி இருக்கும் புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சியான் ரசிகர்கள். 

இந்த படத்தின் டப்பிங் வேலைகள் லாக்டவுனுக்கு பிறகு நேற்று துவங்கியது. ஷூட்டிங் முடிந்தவரையிலான காட்சிகளுக்கு டப்பிங் வேலைகளை முடித்து விட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கவுள்ளனர். இந்நிலையில் படத்தின் முக்கிய ரோலில் நடிக்கும் இர்ஃபான் பதானின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியானது. அஸ்லான் இல்மாஸ் எனும் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழு.