கர்நாடகாவில் குடும்பத்தினர் கண்முன்னே இளம் பெண் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுன் பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஐஸ்வர்யா, அந்த பகுதியில் கல்லூரியில் படித்து வந்ததாகத் தெரிகிறது. 

இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை நேரத்தில் இளம் பெண் ஐஸ்வர்யா, தனது குடும்பத்தினருடன் அங்குள்ள கலபுரகி மாவட்டம் கங்காபூரில் உள்ள தத்தாத்ரேயா கோயிலுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். அவர்களது கார், அங்குள்ள விஜயாப்புரா மாவட்டம் அலமேலா தாலுகா தேவனாங்கோன் பகுதியில் கார் சென்றுள்ளது. அப்போது, அந்த வழியாக ஓடும் பீமா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி உள்ளது. 

ஆற்றின் அழகைப் பார்த்த அவர்கள் அனைவரும், அந்த ஆற்றுப் பாலத்தில் காரை நிறுத்தி உள்ளனர். அப்போது, இளம் பெண் ஐஸ்வர்யாவும், அவரது குடும்பத்தினர் செல்போனில் செல்பி எடுத்து கொண்டு இருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஐஸ்வர்யா, திடீரென ஆற்றில் குதித்து உள்ளார். 

ஆற்றில் குதித்த வேகத்தில் அவர், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மேலும், இது தொடர்பாக அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது பற்றிய தகவரல அலமேலா போலீசார், தீயணைப்பு படையினருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, போலீசார் மற்றம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஐஸ்வர்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த நேரம், ஆற்றில் குதித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஐஸ்வர்யா சடலமாகக் காணப்பட்டார். அவரது உடலைத் தீயணைப்பு படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இளம் பெண் ஐஸ்வர்யாவின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த காட்சி, அங்கு கூடியிருந்த மக்களை கண் கலங்க வைத்தது. 

அதன் பிறகு, ஐஸ்வர்யாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார். விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், இளம் பெண் ஐஸ்வர்யா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. ஆனால், அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து, நடத்தப்பட்ட விசாரணையில், “காதல் தோல்வியால் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்” என்றும் கூறப்படுகிறது. இந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, குடும்பத்தினர் கண் முன்னே இளம் பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், விஜயாப்புராவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், திருப்பத்தூர் மாவட்டத்தில் கால் சென்டரில் பணி புரிந்து வந்த மனைவியை சரமாரியாக வெட்டி விட்டு போலீசாரிடம் கணவன் சரணடைந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தன்னுடன் சேர்ந்து வாழ வராததால் வெட்டியதாகவும், கணவன் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, அவரது மனைவி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.