விகடன் டெலிவிஸ்டாஸ் கடந்த பல வருடங்களாக தமிழ் சின்னத்திரையில் தங்கள் அசத்தலான சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.விகடனின் சீரியல் என்றாலே சூப்பர்ஹிட் தான் என்ற அளவுக்கு விகடன் ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்து விட்டனர்.

கோலங்கள்,தென்றல்,அழகி,திருமதி செல்வம்,தெய்வமகள்,ரன்,நாயகி என்று பல நட்சத்திர தொடர்களை விகடன் தயாரித்துள்ளனர். இதனை தவிர பல வெற்றிகரமான தொடர்களை விகடன் தயாரித்துள்ளனர்.பல வருடங்களாக சன் டிவியில் தங்கள் தயாரிக்கும் தொடர்களை ஒளிபரப்பி வந்தனர் விகடன் டெலிவிஸ்டாஸ்.சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இவர்களது தொடர்கள் கடந்த வருடம் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து ஒரு வெப் சீரிஸ் தொடரையும் தயாரித்து அசத்தியிருந்தனர் விகடன் குழு.விகடன் டெலிவிஸ்டாஸ் மீண்டும் டிவி சீரியல் தயாரிப்புக்கு வருகின்றனர் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன் கிடைத்துள்ளது.எப்போதும் சன் டிவியில் சீரியல்களை ஒளிபரப்பும் விகடன் இந்த முறை விஜய் டிவியில் தங்கள் புதிய சீரியலை ஒளிபரப்பவுள்ளனர் என்ற தகவலும் கிடைத்திருந்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த தொடரை திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார்.தமிழும் சரஸ்வதியும் என்று இந்த தொடர் பெயரிட்டுள்ளதாவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தொடரில் பிரபல நடிகரும் தொகுப்பாளருமான தீபக் ஹீரோவாக நடிக்கவுள்ளார்,ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடிக்கவுள்ளார்.தொடரில் முக்கிய வேடத்தில் தெய்வமகள் தொடரில் அண்ணியாக நடித்து புகழ் பெற்ற ரேகா நடிக்கிறார்.இந்த தொடரின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் தொடங்கியுள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)