தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இவர் நடித்த ஹீரோ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் முடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.அடுத்ததாக புதுமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் தயாராகி வரும் டான் படத்தில் நடித்து வருகிறார்.இவர் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று திரைக்கு வரவுள்ளது.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சும்மா கிழி என்ற புதிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.செம ஜாலியாக சிவகார்த்திகேயன் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கான ஆர்வத்தை தூண்டியுள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.