தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவர் நடிப்பில் கடைசியாக 2019 பொங்கலுக்கு பட்டாஸ் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் ஜகமே தந்திரம்,கர்ணன்,D 43,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44,ஆயிரத்தில் ஒருவன் 2 என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.ஜகமே தந்திரம்,கர்ணன் படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

ஹிந்தியில் அக்ஷய் குமாருடன் இணைந்து தனுஷ் அத்ராங்கி ரே படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.சாரா அலி கான் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

கொரோனா காரணமாக ஷூட்டிங் தள்ளிப்போனதால் இந்த படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி 2021-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளதாக அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து மீதமுள்ள ஷூட்டிங் விரைவில் நிறைவடைந்து ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.