விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எம்.பி.  கனிமொழி, இந்த சுற்றுப்பயணத்தில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். இன்று 3-வது நாளாக  குமரி மேற்கு மாவட்டத்தில் மக்களை சந்தித்த அவர் , ‘’ இந்த சுற்றுப்பயணத்தின் போது மக்கள் அளிக்கும் ஆதரவை பார்க்கும் போது , இப்போதே திமுகவின் வெற்றி உறுதியாகியிருப்பது தெரிகிறது.


தமிழகத்தை, இந்த அரசு டெல்லியில் அடகு வைத்து விட்டது. சமையல் எரிவாயு விலையை ஒரே மாதத்தில் ரூ.100 உயர்த்தி மக்களை வேதனைப் படுத்துகின்றனர். குளிரில் போராடும் லட்சகணக்கான விவசாயிகள் குறித்து மத்திய அரசுக்கு எந்த கவலையும் இல்லை. விவசாயிகளின் குரலை கேட்க அவர்கள் தயாராக இல்லை. ஒரு மாதத்திற்கு மேல் போராடி வருபவர்களுக்கு தகுந்த பதிலும் சொல்வதில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 
வேலை வாய்ப்பின்றி நம் நாட்டில் இளைஞர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்நிலை மாறும். மேலும்,  பள்ளிகளை திறப்பதற்கு முன்பாகவே மதுபான கடைகளை திறந்துள்ளது இந்த அரசு. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.” என்று பேசியுள்ளார்.