காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கால்வாய் நீர் திறந்து வைத்த அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது, ‘’விருதுநகர் மாவட்டம்  நரிக்குடி, காரியாபட்டி பகுதிகளில் கருவேல மரம் மட்டும் தான் முளைக்கும் என்ற நிலையை மாற்றி விவசாயமும் பண்ண முடியும் என்பதை கிருதுமால் நதி மூலம் செய்து காட்டியவர்  ஜெயலலிதா. திமுக ஆட்சியில் மின்தடையால் தாய்மார்கள் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டக்கூடிய நிலை தான் இருந்தது என தமிழக மக்கள் அறிவர். 

தமிழகத்தில் உழைக்கக்கூடிய அமைச்சர்கள் யார் என்பதையும் தமிழக மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்றால் திமுக வேட்பாளர்கள் பீகாரில் இருந்து தான் வர வேண்டும். திமுகவுக்கு ஆலோசனை வழங்கிவரும் ஐபேக் நிறுவனத்துக்கு, தமிழக மக்கள் கோ பேக் சொல்லிவிட்டார்கள்.

அண்ணா, கலைஞர் காலத்தில் சீட்டு கேட்டு அண்ணா அறிவாலயத்துக்கு வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் இப்போது  பிரசாந்த் கிஷோரை சந்திக்க பீகார் செல்கிறார்கள். அதிமுகவினருக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.” என்றார்.