கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரெஜினா. சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை, விஷால் நடித்த சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

சமூக வலைத்தளத்தில் ரெஜினாவின் குறும்பு அதிகமாகிவிட்டது என்றே கூறலாம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையில்லா புகைப்படம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்த ரெஜினா, தனது குழந்தை பருவ புகைப்படங்களை குறிப்பிட்டு பதிவு செய்து இருந்தார். 

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூட, வீடியோ ஜாக்கியின் சலிப்பான கேள்விக்கு சற்றும் தளராமல் பதில் கூறி, அவருக்கு பல்பு குடுத்தார். 

இந்நிலையில் துடுப்பு கொண்ட நீர் சறுக்கு விளையாட்டில் வெற்றி பெற்றுள்ளார் ரெஜினா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், தல அஜித் பாணியில் ரெஜினா அசத்துகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.  சமீபத்தில் தல அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். நடிகர்களாக இருந்தாலும், விளையாட்டு போட்டிகளிலும் தங்களது திறனால் ஆர்வம் காட்டி வருகின்றனர் என புகழாரம் சூட்டி வருகின்றனர். 

மார்ச் 5-ம் தேதி வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ரெஜினாவின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. பணக்கார தம்பதியினரான எஸ்.ஜே.சூர்யா - நந்திதாவின் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் பணியாளராக நடித்திருந்தார் ரெஜினா. ரெஜினா கைவசம் சூரப்பனகை திரைப்படம் உள்ளது.