தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.இவரது பிகில் படம் கடந்த 2019 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.பொங்கலை முன்னிட்டு இந்த படம் இன்று மிக பிரம்மாண்டமாக கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.

இந்த படத்தில் புட்டபொம்மா,ரௌடி பேபி உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் வேலை செய்யப்போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளதாக படத்தின் இயக்குனர் நெல்சனுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தோடு பட பாடலின் Rehersal  ஏப்ரல் கடைசியில் நடைபெறும் என்றும் மே மாதத்தில் பாடல் ஷூட்டிங் நடைபெறும் என்றும் அசத்தல் அப்டேட் ஒன்றை கொடுத்திருந்தார்.ஆனால் சில நிமிடங்களிலேயே இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் இருந்து ஜானி மாஸ்டரால் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

thalapathy 65 song shoot to happen in may vijay nelson pooja hegde anirudh