தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஜீ தமிழின் முக்கிய தொடர்களில் ஒன்று ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி.வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.700 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் வெற்றிகரமாக சென்று வருகிறது.

இந்த தொடரில் புவி அரசன் மற்றும் அஸ்வினி முன்னணி வேடத்தில் நடித்து வருகின்றனர்.ஸ்வாதி,அழகப்பன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.கொரோனா பாதிப்புக்கு பிறகு மீண்டும் தொடங்கிய இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த சுபத்ரா சில காரணங்களால் விலக அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பூவே பூச்சூடவா தொடரில் நடித்து வரும் க்ரித்திகா நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

A post shared by Tamizh Serials (@tamil_serials_)