சிம்பு தன் உடல் எடையை 30 கிலோ குறைத்த பிறகு நடித்துள்ள முதல் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிலம்பரசன் ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். நந்திதா, பாரதி ராஜா, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் இந்த படத்தில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற தகவலை தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம் மாதவ் மீடியா. ஈஸ்வரன் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. படத்தின் இசையமைப்பாளர் தமன், பின்னணி இசை கோர்ப்பு பணிகளை முடித்து விட்டதாக நேற்று பதிவு செய்திருந்தார் 

ஈஸ்வரன் படத்தின் டீஸருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஈஸ்வரன் படத்திற்கான டப்பிங் பணிகளையும் நிறைவு செய்தார் சிலம்பரசன். அடுத்ததாக சிலம்பரசன் போடா போடி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

போடா போடி படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் பதம்குமார். ஒளிப்பதிவாளர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வரும் பதம்குமார், போடா போடி 2 படத்தைத் தயாரிக்கவுள்ளதை உறுதி செய்திருக்கிறார். இதில் புதுமுக நாயகி ரித்திகா பால் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

போடா போடி 2 படத்தின் கதை முடிவாகிவிட்டது. ஆனால், இயக்குனர் யார் என்பது சஸ்பென்ஸ் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில்தான் காட்சிப்படுத்தப்படவுள்ளன. தற்போது மாநாடு படத்தின் கவனம் செலுத்தி வரும் சிம்பு, அடுத்ததாக ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.