மெஹந்தி போடும் இளம் பெண் 5 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மெஹந்தி கலைஞராக இளம் பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணின் வேலை என்பது, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்விற்குச் சென்று மணப்பெண்ணிற்கு கை மற்றும் கால்களில் மெஹந்தி போடும் பணியை செய்து வந்தார்.

அத்துடன், திருமணத்திற்கு வரும் மணமக்களின் உறவினர்கள் தெரிந்தவர்கள் என்று பலரிடமும் அந்த பெண் தன்னுடைய  தொலைப்பேசி எண்களை கொடுத்து, மெஹந்தி போடும் வேலை இருந்தால், உடனே அழைக்கும் படி தனது செல்போன் எண்ணை கொடுத்து விட்டு வருதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

அதன்படி, சமீபத்தில் அப்பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்வில், மெஹந்தி கலைஞரான இந்த இளம் பெண், அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் நட்பாக அறிமுகம் ஆகி உள்ளார். அதன் படி, அவர்கள் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த இளம் பெண்ணுக்கு, கடந்த 18 ஆம் தேதி தொலைப்பேசியில் அழைத்துப் பேசிய அந்த இளைஞர், “திருமணத்திற்கு மெஹந்தி போட வருமாறு” குறிப்பிட்ட முகவரிக்கு அந்த இளம் பெண்ணை அழைத்து உள்ளார்.

அந்த அழைப்பை நம்பி சென்ற அந்த பெண், பஞ்சாப் டாக்காவில் உள்ள மண்டியா கிராமத்திற்குச் சென்று உள்ளார். அங்குள்ள ஒரு பங்களாவிற்குச் சென்ற அந்தப் பெண்ணை, அந்த வீட்டில் மறைந்து இருந்த 5 இளைஞர்கள் அந்த இளம் பெண்ணை தாக்கி, வலுக்கட்டாயமாகச் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்து எப்படியோ தப்பித்து வெளியே வந்த அந்த இளம் பெண் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாகச் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தி, என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொண்டனர். 

மேலும், அந்த இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த அந்த 5 பேரையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

முக்கியமாக, இளம் பெண்ணை பலாத்காரம் செய்த 5 பேர் மீதும் சட்டப் பிரிவு 376 இன் கீழ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த தீவிர விசாரணையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரில் 4 பேரை தற்போது போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அத்துடன், தலைமறைவாக உள்ள மற்றொருவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து பஞ்சாபின் லூதியானாவின் துணை காவல்கண்கானிப்பாளர் குருபன்ஸ் சிங் கூறும்போது, “பாதிக்கப்பட்ட இளம் பெண், கடைசியாகச் சென்ற திருமண நிகழ்ச்சியில் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரிடம் நட்பாகி உள்ளார். அதன் பின்னர், அந்தப் பெண்ணை டாக்காவி, மண்டியானி கிராமத்திலுள்ள ஒரு பங்களாவில் வைத்து அந்த 5 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இந்த வழக்கில், தற்போது 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவரைத் தேடி வருகிறோம். 

மேலும், லூதியானாவின் சிவில் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அப்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று, அவர் தெரிவித்தார். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.