கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து “நான் அழைக்கும் போதெல்லாம் நீ வர வேண்டும்” என்று, கள்ளக் காதலன் மிரட்டியும்,  அடிபணிய மறுத்த காதலியை பழிவாங்க அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சோம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருபாநிதி என்பவரின் மனைவி 35 வயதான ஜெயந்தி என்ற பெண் தான் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளார்.

அதாவது, அங்குள்ள அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான 37 வயதான சசிகுமார்,  என்பவருக்கும், 35 வயதான ஜெயந்திக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இப்படியான உல்லாச இன்பத்தின் போது, ஒரு முறை கள்ளக் காதலன் சசிகுமார், தனது காதலி ஜெயந்திக்குத் தெரியாமல் தனது செல்போனில் அவரை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு உள்ளார். 

ஒரு கட்டத்தில் கள்ளக் காதலனிடம் உள்ள ஆபாசப் படம் பற்றிய விசயம் ஜெயந்திக்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயந்தி, சசிகுமாரிடம் சண்டைக்குச் சென்று உள்ளார். 

அப்போது, காதலியை மிரட்டிய சசிகுமார், அந்த வீடியோவை காட்டி “நான் அழைக்கும் போதெல்லாம் நீ என்னிடம் வர வேண்டும். இல்லை என்றால், இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு விடுவேன்” என்று மிரட்டியதாகத் தெரிகிறது. 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த காதலி, கள்ளக் காதலனை விட்டு விலக முடிவு செய்து, அவருடனான தொடர்பை முற்றிலும் துண்டித்து வந்தார். ஆனால், கள்ளக் காதலன் சசிகுமார், தொடர்ந்து “என்னை வந்து சந்திக்க வேண்டும்” என்று, உல்லாசத்திற்கு அழைத்து உள்ளார். ஆனால், அதற்கு  அந்த பெண் அடிபணிய மறுத்துவிட்டார். அத்துடன், தன்னுடைய வீடியோவை டெலிட் செய்யும் படியும், அந்த பெண் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த கள்ளக் காதலன், காதலியைப் பழிவாங்க முடிவு செய்தார். அதன் படி, தனது காதலியின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளார்.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த காதலி, என்ன செய்து என்று தெரியாமல், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கள்ளக் காதலன் சசிகுமாரை அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, சசிகுமாரின் செல்போனை வாங்கி, அதில் இருக்கும் அந்த ஆபாசப் படங்களை அழிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து “நான் அழைக்கும் போதெல்லாம் நீ வர வேண்டும்” என்று, கள்ளக் காதலன் மிரட்டியும், காதலி அடிபணிய மறுத்ததால், காதலியைப் பழிவாங்க அந்த வீடியோவை இணையத்தில் காதலன் வெளியிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.