தமிழ் திரையுலகின் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர் காளி வெங்கட். 2010-ம் ஆண்டில் திரையுலகில் கால்பதித்தார். பல வெற்றி திரைப்படங்களில் இவரது பாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் இவரது ரோல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அசத்தலான ஓர் அப்டேட்டை தந்துள்ளார் காளி வெங்கட். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சார்பாட்டா பரம்பரை. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கான்ட்ராக்டர் கோனி என்ற கேரக்டரில் நடித்துள்ள காளி வெங்கட் இன்று தனது டப்பிங் பணியை முடித்து உள்ளார். இதனை அடுத்து தனது ட்விட்டரில்நிறைவு, ஆழமான ,தரமான, நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி, நன்றி இயக்குனர் பா.ரஞ்சித் என தெரிவித்துள்ளார். மேலும் டப்பிங் செய்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா நடித்துள்ள இத்திரைப்படம் வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதற்காக தனது உடலமைப்பை முழுமையாக மாற்றி நடித்துள்ளார் ஆர்யா. படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா, காளி வெங்கட், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குனராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குனராக அன்பறிவு ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

படத்தின் பாத்திரங்கள் கொண்ட சார்பட்டா பரம்பரையின் உலகை காண்பித்தனர் படக்குழுவினர். அந்த வீடியோவும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.