16 வயது மாணவியை அரைகுறை ஆடையுடன் வீடியோ காலில் பேச வைத்து ரசித்த திருமணமான ஃபேஸ்புக் காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளான்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, ஒருவர், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த மாணவிக்கு தற்போது கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஆன்லைன் வகுப்பிற்காக வீட்டில் பெற்றோர் வாங்கித் தந்த செல்போனில் எந்நேரமும் சமூக வலைத்தளங்களில் மூழ்கியே இருந்து உள்ளார்.

அப்போது, இந்த மாணவிக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்கக் கமலக்கண்ணன் என்பவர் ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஆகி உள்ளார். அவரிடம் இந்த மாணவி தொடக்கத்தில் நட்பாகவே பேசி வந்துள்ளார். 

ஆனால், போக போக இருவரும் தொடர்ந்து ஃபேஸ்புக் மெசேஞ்சரில் தங்களது நட்பைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே வந்துள்ளனர். இந்த நட்பு, இனம் புரியாத நட்பாக மாறவே, இருவரிடையேயான நட்பும் எல்லை மீறி சென்று உள்ளது. 

இதனையடுத்து, இருவரும் தங்களது செல்போன் எண்ணை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். இப்படியாக இருவரும் மணிக் கணக்கில் செல்போனில் பேசி வந்த நிலையில், திடீரென்று கமலக்கண்ணன் அந்த 16 வயது மாணவியிடம், “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு சற்று அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, பிறகு யோசித்து அந்த மாணவி, சற்று தயக்கத்துடன் அவனின் காதலை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, சில நாட்கள் சென்ற பிறகு, அந்த மாணவியிடம் “அரைகுறை ஆடையுடன் புகைப்படம் அனுப்புமாறு” அவன் கேட்டிருக்கிறான். அதற்கு, அந்த மாணவியும் காதலன் கமலக்கண்ணன் மீது உள்ள நம்பிக்கையில், தனது அரை குறை நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி வைத்து உள்ளார். 

அவை எல்லாவற்றையும் தன்னுடைய சொல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்ட வைத்துக் கொண்ட கமலக்கண்ணன், அந்த சிறுமியிடம் இந்த முறை “நிர்வாணமாக வீடியோ காலில் வர வேண்டும் என்றும், இல்லை என்றால் நீ ஏற்கனவே எனக்கு அனுப்பி வைத்த அறை குறையான படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று, மிக கடுமையாக மிரட்டி உள்ளான். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, என்ன செய்வது என்று தெரியாமல், தவித்த நிலையில் மாணவியும் பல நாட்கள் அவரின் மிரட்டலுக்குப் பயந்து கமலக்கண்ணனின் சொல்கிற படியே கேட்டு நடந்து இருக்கிறார்.

இப்படியான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த மாணவி அரைகுறை ஆடையுடன் கமலக்கண்ணனுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த பெற்றோர், மகளின் செல்போனை பறித்துக்கொண்டு, “என்ன நடக்கிறது?” என்று அதிர்ச்சியோடு விசாரித்து உள்ளனர். 

அப்போது, அந்த மாணவியோ கமலக்கண்ணனால் தனக்கு நடந்து வரும் கொடுமைகளைப் பெற்றோரிடம் கூறி அழுது இருக்கிறார். இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர், அங்குள்ள முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், மாணவியை காதல் வலையில் வீழ்த்தி, பின்னர் மிரட்டி வந்த கமலக்கண்ணன், திருப்பூரில் ஒரு சாயப்பட்டறை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதை முதலில் கண்டுபிடித்தனர். 

அத்துடன், மாணவியை காதல் வலையில் வீழ்த்திய கமலக்கண்ணனுக்கு, ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, கமலக்கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்து காவல் நிலையத்தில் அழைத்து வந்த தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, அவரை சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.