ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கடந்த 2019-ல் வெளியாகி வெற்றிநடை போட்ட திரைப்படம் நட்பே துணை.ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.இந்த படத்தில் அனகா ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார்.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் அசத்தலான வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிறது.A1 எக்ஸ்பிரஸ் என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டிருந்தனர்.மாநகரம்,மாயவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான சந்தீப் கிஷான் நடித்துள்ளார்.

இது சந்தீப் கிஷான் நடிக்கும் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் ஹீரோயினாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார்.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் நாளை சன் NXT தளத்தில் வெளியாகவுள்ளது.தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்றான அமிகோ பாடல் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.